×

தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037ம் ஆண்டு சதய விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037 ஆம் ஆண்டு சதய விழா நேற்று  தொடங்கியது. நேற்று காலை 9 மணி அளவில் இறை வணக்கம், மற்றும் மங்கல இசை மற்றும் திருமுறை அரங்கம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சதய குழு தலைவர் செல்வம் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை உரை ஆற்றினார். தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா  முன்னிலை உரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், சரஸ்வதி மஹால் நூலகம் மணிமாறன் தொடக்க உரை ஆற்றினர். அதைத்தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் தமிழ் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் திருவள்ளுவன் தொடக்க உரையாற்றினார். இந்த கருத்தரங்கத்தை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக பங்கு பெறுகின்றனர். இந்நிகழ்ச்சி பள்ளி கல்லூரி மாணவர்கள், நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள், பொதுமக்கள் திரளானோர் பங்கு பெற்றனர்….

The post தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037ம் ஆண்டு சதய விழா appeared first on Dinakaran.

Tags : Sataya festival of father-in-law ,Rajaraja Chola ,Thanjavur big temple ,Thanjavur ,year ,Sadaya ceremony of father- ,-law ,Rajaraja ,Chola ,
× RELATED பள்ளிகளுக்கு விடுமுறையை முன்னிட்டு...